லத்தியால் குத்தி என் அண்ணனின் ஆசன வாயிலையே சிதைத்துவிட்டார்கள்! கதறிய பெனிக்ஸின் தங்கை!

போலிசார் லத்தியால் குத்தி என் அண்ணனின் ஆசன வாயிலையே சிதைத்து விட்டார்கள் என்று சாத்தான்குளம் காவல்நிலையத்தில் உயிரிழந்த பென்னிக்ஸ் என்பவரின் சகோதரி கதறியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சாத்தான்குளத்தில் அரசடி வினாயகர் கோயில் தெரு அமைந்துள்ளது. இப்பகுதியில் ஜெயராஜ் (வயது 58) என்பவர் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு பென்னிக்ஸ் (வயது 32) என்ற ஒரு மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் செல்போன் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். கடந்த 19 ஆம் தேதி ஊரடங்கு விதிகளை இவர்கள் பின்பற்றாமல் கடையைத் திறந்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் ஜெயராஜை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதைப்பற்றி தகவல் அறிந்ததும் அவரது மகன் பென்னிக்ஸ் தந்தையை பார்ப்பதற்காக அந்த காவல் நிலையத்திற்கு சென்று விடுகிறார்.

 காவல் நிலையத்தில் போலீசார் பென்னிக்ஸ் முன் அவரது தந்தை ஜெயராஜை அடித்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்து 

 அவரது மகன் போலீசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இதனைத்தொடர்ந்து பென்னிக்ஸ்க்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி விடவே அங்கு அவரை போலீசார் காவல்நிலையத்தில் இருக்க வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து ஜெயராஜும் அவரது மகனும் இறந்து விட்டதாக செய்தி மட்டும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

இதுபற்றி அவரது சகோதரியிடம் கேட்டபொழுது, "வெள்ளிக்கிழமை போலீசார் சேர்ந்து என் அப்பாவை கழுத்து புடிச்சு தள்ளி, அடிச்சாங்க.. அப்போ ஏன்னு கேக் போன என் தம்பியையும் அடிச்சுருக்காங்க... விசாரணைன்னு அழைத்து போய் தம்பியையும் அங்கேயே அடைத்துவைத்து கேட்டை மூடி வைத்து விட்டார்கள். தம்பியின் வக்கீல் நண்பர்களை கூட உள்ளே விடவில்லை, மற்ற யாரையுமே உள்ளே விடாமல், என் தம்பி முன்னாடியே அப்பாவை அடிச்சிருக்காங்க.. உடம்பு முழுக்க ரத்தம் வரும் அளவுக்கு விடிய விடிய அடிச்சிருக்காங்க.. நடுராத்திரி 1.30 மணிவரை அத்தனை போலீஸும் போட்டு அடிச்சுருக்காங்க.

ரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையிலும் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் ஜெயிலில் அடைச்சு வச்சிருந்தாங்க. என் அப்பாவுக்கு வயது 58 அவருக்கு உடம்புல என்ன சதை இருக்கும் சொல்லுங்க.. அவர போட்டு அடி அடின்னு அடிச்சு இருக்காங்க. அடுத்த நாள் சனிக்கிழமை அன்று உயிர்ப்போயிடுச்னு டாக்டர் சொல்லிட்டார் என்று கூறி அந்த இளம்பெண் கதறி அழுதது நமது கண்களில் இருந்தும் கண்ணீரை வர வைக்கும் விதமாக உள்ளது.

என் அண்ணனின் ஆசனவாயிலில் குத்தி உள்ளனர் என்று கூறி கதறி அழுதிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் உயரிழந்த பென்னிக்ஸ் சகோதரி பெர்சி கூறும் பொழுது "என் தம்பிக்கு நெஞ்சுமுடி நிறைய இருக்கும்.. ஆனால் அந்த நெஞ்சு முடியெல்லாம் கையிலேயே புடுங்கி எடுத்துட்டாங்க" என்று கண்ணீருடன் சொன்னார். ஆனால் இதுவரை இந்த வழக்கில் என்னதான் நடந்தது என்பது தெளிவாக தெரியவில்லை. மேலும் இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த சம்பவத்தினை ஜாதிபிரச்சனையாக மாற்ற சிலர் முயன்று வருகின்றனர்.. ஏற்கனவே வியபாரிகளிடடம் கொந்தளித்து கிடந்த இந்த விஷயம் சாதி விவகாரத்தினால் திசை திரும்பவும் அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்த சம்பவம் நடந்து நான்கு நாட்கள் ஆன பின்பும் இன்னும் இது பற்றி உண்மை தகவலை வெளிக் கொண்டுவர முடியவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. இது பற்றி போலீசார் எஃப்.ஐ.ஆரில், "அப்பாவும் மகனும் எங்களை அவதூறாக பேசி தரையில் புரண்டதால், அவர்களுக்கு ஊமைக்காயம் ஏற்பட்டது" என்று தெரிவித்துள்ளது மேலும் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.