தினகரன் ஆட்டம் முடிந்தது! விவேக் கட்டுப்பாட்டிற்கு சென்ற ஒட்டு மொத்த ஜெயா டிவி!

ஒரே ஒரு ஆர்.கே.நகர் வெற்றிதான் தினகரனுக்குப் பின்னே இத்தனை பேரை கொண்டுவந்து சேர்த்தது.


தினகரன் சொன்னது, சொல்வது எல்லாமே நடக்கும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது. அதனால், அவர் செல்லும் இடமெல்லாம் கண்மூடித்தனமாக மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தார்கள். காட்சிகள் மாறின. நாடாளுமன்ற இடைத்தேர்தலும், 22 சட்டமன்ற இடைத்தேர்தலும் நடந்தது. இவரது அ.ம.மு.க.வின் வாக்குகள்தான் தி.மு.க.வின் வெற்றிக்குக் காரணமாகவும், அ.தி.மு.க.வின் தோல்விக்குக் காரணமாகவும் இருக்கும் என்று கருதப்பட்டது. 

ஆனால், எல்லா கணக்குகளும் பொய்யாகிப் போனது. நேற்று தொடங்கிய கமல்ஹாசன், சீமான் கட்சிகளுடன் மோதவேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டார். இவருக்கென வாக்குவிகிதம் எங்கேயும் இல்லை என்று உறுதியாகிப் போனது. அதனால் இனியும் இவருடன் இருக்கவேண்டுமா என்று ஆளாளுக்கு விலகிப் போனார்கள்.

செந்தில்பாலாஜி, மைக்கேல் ராயப்பன், கலைராஜன், தங்கதமிழ்செல்வன் போனது மட்டுமின்றி, அடுத்து செல்லப்போவது பழனியப்பனா அல்லது தஞ்சை ரங்கசாமியா என்று பட்டிமன்றம் வைக்காத குறையாக பிரச்னை ஓடிக்கொண்டு இருக்கிறது. இதெல்லாம் பிரச்னை இல்லை எனும் அளவுக்கு பெரும் பிரச்னையில் சிக்கிவிட்டார் தினகரன்.

ஆம்,இத்தனை நாளும் அவரை ஒரு மாபெரும் தலைவராக சித்தரித்துவந்த ஜெயா டி.வி. நிறுவனம் நேற்று நடத்திய ஒரு மீட்டிங்கில், இனி தினகரனை மற்ற தலைவர்களைப் போன்று காட்டினால் போதும், அவருக்கு என்று பிரத்யேக முக்கியத்துவம் தர வேண்டாம் என்று விவேக் உத்தரவு பிறப்பித்துவிட்டாரம்.

தகவல் அறிந்து, அதிர்ந்துபோன் தினகரன் குரூப் பெங்களூருவை தொடர்புகொள்ள, அங்கே யாரையும் தொடர்புகொள்ள முடியாத நிலைமை நீடிக்கிறதாம். ஆக, சொந்த வீட்டில் இருந்தும் துரத்தப்பட்டுவிட்டார் தினகரன். பரிதாபம்தான்.