சசிகலாவுக்கு சிறையில் கடும் நெருக்கடி..! ரஜினிதான் காரணமா?

இத்தனை நாட்களாக யாரும் கண்டுகொள்ளாமல் இருந்த சசிகலாவை, தன்னுடைய படத்தின் வசனத்தின் மூலம் பரபரப்பாக்கினார் ரஜினி. பணம் இருந்தால் சிறையில் இருந்து ஷாப்பிங் போகலாம் என்று பேசியதும் விஷயம் டென்ஷன் ஆனது.


சசிகலாவின் வழக்கறிஞர் உடனே அதிர்ச்சியுடன், ‘உடனடியாக வசனத்தை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் போவோம்’ என்று கோபமாக அறிக்கை விட்டார். இதையடுத்து என்ன நடந்தததோ, வசனத்தை நீக்க ரஜினி சம்மதம் தெரிவித்து விட்டதாகச் சொன்னார்கள்.

அடுத்த நாளில் இருந்தே அந்த வசனம் படத்தில் இருந்து தூக்கப்பட்டது. இவை எல்லாமே வெளியில் நடந்தவை. பெங்களூரு சிறைக்குள்ளும் தர்பார் படம் கடும் பின்விளைவுகளை ஏற்படுத்தியதாகச் சொல்கிறார்கள்.

ஆம், எந்த நேரமும் சசிகலாவை கண்காணிப்பதற்கு அதிகாரிகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு என்று சொல்லப்படவே, அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த அத்தனை வசதிகளும் உடனடியாக பறிக்கப்பட்டதாம். அதனால், மற்ற கைதிகளைப் போலவே மாற்றப்பட்டுள்ளாராம் சசிகலா. பத்த வைச்சிட்டியே பரட்டை!