தேர்தல் நிதியில் கையாடல்! சசிகலா திடீர் அழைப்பு! பீதியில் டிடிவி!

சர்க்கரையாகப் பேசுவதில் வல்லவரான தினகரன், தேர்தல் முடிவுக்குப் பிறகு குட்டி போட்ட பூனையாக முடங்கிக்கிடக்கிறார்.


நாள்தோறும் அ.ம.மு.க.வில் இருந்து வெளியேறும் நிர்வாகிகள் குறித்த கலக்கமும் தினகரனுக்கு இருக்கிறது. மேலும் தேர்தல் வரையிலும் தினகரனுக்கு மரியாதை கொடுத்து பேசிவந்த தமிழக அமைச்சர்களும் இப்போது, அவரை கண்டுகொள்வதே இல்லை.

இத்தனை இடைஞ்சல்களுக்கு நடுவே, திடீரென தன்னை வந்து சந்திக்கும்படி சசிகலா அழைப்பு விட்டிருக்கிறார். அதனால் திங்கள் காலை பெங்களூரு சிறைக்குச் சென்று சசிகலாவை சந்திக்க இருக்கிறர் தினகரன். தேர்தல் முடிவு வரும்போது நீங்கள் பரோலில் வந்து வெளியே இருக்க வேண்டும், அப்போதுதான் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் உங்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவார்கள் என்று அவரை ஏமாற்றி பரோல் போட வைத்தார்.

நல்லவேளையாக பரோலுக்கு அனுமதி கிடைக்கும் முன்னரே தேர்தல் முடிவுகள் ஜீரோவாக மாறிவிட, அப்படியே முடங்கிவிட்டார் சசி. தேர்தலுக்கு செலவு செய்த பணத்துக்கு இதுவரை தினகரன் கணக்கு காட்டவில்லையாம். அதற்காகத்தான் இந்த அழைப்பு என்கிறார்கள்.

சசிகலா வேறு ஒரு நபரின் மூலம் ஒவ்வொரு வேட்பாளருக்கும் எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற கணக்கு எடுத்திருக்கிறாராம். தினகரன் வசம் ஒப்படைக்கப்பட்ட பணத்துக்கும், சசி கையில் இருக்கும் லிஸ்ட் பணத்துக்கும் ஏணி வைத்தாலும் எட்டவில்லையாம். அதனால்தான் அழைப்பு என்கிறார்கள்.

நம்பவைத்து தன்னை கழுத்தறுத்துவிட்டதாக இப்போது சசிகலாவும் தினகரன் மீது கோபப்படுகிறாராம். அதனால் சிறையில் கன்னாபின்னாவென்று திட்டுக்கள் விழும் என்கிறார்கள். ஆனாலும், சிறையில் இருந்து வெளியே வரும் தினகரன், ‘சட்டமன்றத் தேர்தலுக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் வேலை பார்க்கச் சொல்லிட்டாங்க, நாங்கதான் ஜெயிப்போம்” என்று கெத்தாக பேட்டி கொடுப்பார் என்பது மட்டும் நிச்சயம்.