திருமணமாகி 4 நாட்கள் தான் ஆகிறது! அதற்குள் மன்னிப்பு கேட்ட புதுப் பொன்னு! அனிதா சம்பத்துக்கு என்ன ஆச்சு?

சர்க்கார் படத்தில் செய்தி வாசிப்பின் மூலம் புகழான அனிதா சம்பத் திருமணம் செய்துவிட்டதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


செய்தி வாசிப்பவர்களுக்கு முகபாவனைகள் மிகவும் முக்கியமானதாகும். அவர்கள் தங்கள் முகத்தில் சர்வ லட்சணங்களையும் வெளிப்படுத்த வேண்டும். மேலும் தெளிவான உச்சரிப்பும் பொறுமையான தமிழ் நடையிலும் பேச வேண்டும். நிறைய செய்தியாளர்கள் புகழ் அடைந்துள்ளனர். அந்த வழியில் "சர்க்கார்" படத்தில் 2 நிமிடங்கள் மட்டுமே செய்தி வாசித்து புகழ் அடைந்தவர் அனிதா சம்பத்.

25-ஆம் தேதியன்று அனிதா சம்பத் தன் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதற்கான பதிவை அவர் இன்ஸ்டாகிராமில் அன்றே பதிவிட்டார். இந்த செய்தியானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. சிலர் இங்கு திருமணத்திற்கு அனிதா கட்டாயப்படுத்தப்பட்டார் என்றும் பதிவு செய்திருந்தனர்.

ஆனால் அவற்றை முறியடிக்கும் வகையில் அனிதா நேற்று இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார். அதாவது, "என் திருமணம் திடீர் திருமணம் இல்லை. நான் அவரை 3 வருடங்களாக காதலித்து வந்தேன். இருவீட்டு பெற்றோரின் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற்றது. மிகவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களை மட்டுமே அழைத்தோம்.

திருமணத்தை குறித்து இன்ஸ்டாகிராமில் 22-ஆம் தேதியை பதிவு செய்துவிட்டேன். ஆனால் என் இன்ஸ்டாகிராம் ப்ளாக் ஆகிவிட்டது. முன்பே திருமணத்தைப் பற்றி கூறினால் யூடியூப் சேனல்கள் என்னிடம் பேட்டி எடுக்க வருவார்கள். அப்போது நான் அடைக்காத அவர்கள் என்னை பற்றி தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக கடைசி நிமிடத்தில் நான் பதிவு செய்திருந்தேன்.

யார் மனதேனும் புண்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்" என்று பதிவு செய்திருந்தார். இந்தப்பதிவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.