நீ ரொம்ப கருப்பா இருக்க..! அடுத்தடுத்து நிராகரிக்கப்பட்ட சரவணன் மீனாட்சி ரக்சிதா..! ஆனால் தற்போது..?

தன்னுடைய நிறத்தால் பல இடங்களில் நிராகரிக்கப்பட்ட ரக்சிதா தற்போது , பல சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார்.


முதலாக சீரியலில் அறிமுகமானபோது மிகவும் கருப்பான மேக்கப் அணிந்திருந்தது சீரியல் ஒன்றில் நடித்திருந்தார். பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட சரவணன் மீனாட்சி தொடரின் மூலமாக உலகமெங்கும் பெரும் ரசிகர்களை கொண்டவர் நடிகை ரக்ஷிதா. இந்த தொடரின் மூலம் புகழின் உச்சிக்கே சென்ற நடிகை ரக்ஷிதா அதற்கு முன்பாக பல தொடர்களில் நடிப்பதற்கான வாய்ப்பை தன்னுடைய நிறத்தின் காரணமாக இழந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பெங்களூரில் பிறந்து வளர்ந்த நடிகை ரக்ஷிதா , தமிழ் ,தெலுங்கு ,கன்னடம் என பல மொழிகளில் சீரியலில் நடித்து வருகிறார். தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் தன்னுடன் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது குடும்ப வாழ்க்கையிலும் நட்சத்திரமாக ஜொலித்து வரும் நடிகை ரக்ஷிதா , தா மாநிறமாக இருப்பதால் பல இடங்களில் ஒதுக்கப்பட்ட நிலையில் இருந்து  தற்போது தன்னுடைய அசராத நடிப்பால் மிகப்பெரிய உச்சத்தை பெற்றுள்ளார் என்று தான் கூற வேண்டும்.