பிக்பாஸ் வீட்டில் இருந்து சரவணன் துரத்தியடிக்கப்பட்டது ஏன்? முன்னாள் போட்டியாளர் கூறிய திடுக் தகவல்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து சரவணன் வெளியேற்றப்பட்டதற்கான காரணங்கள் புரளிகள் ஆக சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.


பிக்பாஸ் 3 நிகழ்ச்சி தமிழில் நன்றாக வளர்ந்து கொண்டிருக்கின்றது. வாரத்திற்கு ஒருவர் வெளியேற்றப்பட்டு வந்தனர். இந்நிலையில் யாரும் எதிர்பாராதவாறு சென்ற வாரம் பருத்திவீரன் புகழ் நடிகர் சரவணன் வெளியேற்றப்பட்டார்.

இவருடைய வெளியேற்றம் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. கன்பெஷன் ரூமுக்கு அழைத்து  அங்கிருந்தே அவர் வெளியேற்றப்பட்டார். மக்கள் எதிர்பாராத வகையில் இந்த வெளியேற்றம் நிகழ்ந்தது.சரவணனின் வெளியேற்றத்தை அறிந்தபோது அனைத்து பிக் பாஸ் குடும்ப உறுப்பினர்களும் கதறி அழுதனர்.

சரவணன் வெளியேற்றப்பட்டதன் காரணங்களை கேட்கப்போகும் சொல்ல மறுத்துவிட்டார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் பலரும் சரவணன் வெளியேறியதற்கு இதுதான் காரணம் என்று யூகித்து வருகின்றனர்.

இந்த வழியில் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரும், தற்போதைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான டான்ஸ் கோரியோகிராபர் சாண்டியின் முன்னாள் மனைவியுமான காஜல் தன்னுடைய கருத்தினை பதிவு செய்துள்ளார்.

அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "சென்ற வாரம் சரவணன் சென்னை பேருந்தில் பெண்களை உரசுவதற்காகவே பணியாற்றுவேன் என்று கூறியிருந்தார். அது வீட்டின் உறுப்பினர்களிடையே மட்டுமின்றி பொதுமக்களிடையேவும் புகைச்சலை கிளப்பியது. இதனால் பலர் அவருக்கு ரெட் கார்ட் அளித்து வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்திருந்தனர். இதனை ஏற்று கூட பிக் பாஸ் அவரை வீட்டிலிருந்து வெளியேற்றி இருக்கலாம்" என்று கூறியிருந்தார்.

சரவணன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதற்கான காரணத்தை நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் மட்டுமே அறிந்திருப்பர் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 

இந்த வாரம் முழுவதும் இந்த நிகழ்வானது பிக்பாஸ் வீட்டில் அவர் பேசப்பட்டிருக்கும் என்று கூறினால் அது மிகையாகாது.