சரவணா ஸ்டோர் அண்ணாச்சியின் சின்ன வீடே இப்படியா? செம வைரல் போட்டோ உள்ளே!

தொலைக்காட்சி விளம்பரங்களில் வண்ண ஆடைகளில் கவர்ந்திழுக்கும் பெண்களுடன் அசத்தல் நடனமாடி பிரபலமான சரவணா ஸ்டோர் அண்ணச்சி நெல்லையில் கட்டியுள்ள அரண்மனை போன்ற புதிய வீடு அவரை விட பிரபலமாகியிருக்கிறது.


தொடக்கத்தில் சரவணன் நடித்த விளம்பரங்களுக்கு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களும் மீம்ஸ்களும் குவிந்தன. ஆனால் அவர் தனது முடிவிலிருந்து பின் வாங்காமல் தொடர்ந்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு நடிகர் சங்க விழாவிலும் முன்னணி நடிகர்களுடன் கலந்துகொண்டார்.

அவர் நாயகனாக நடிக்க முடிவெடுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகும் நிலையில், அவர் கதை கேட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும், 2020-ஆம் ஆண்டு படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சென்னையில் அண்ணாச்சிக்கு பிரம்மாண்டமாய் பல துணிக்கடை மாளிகைகள் இருப்பதை போல பலகோடி ரூபாய் மதிப்பில் சொகுசு வீடுகளையும் கட்டியிருக்கிறார் . சொந்த ஊரான திருநெல்வேலி புறநகர் பகுதியில் பிரம்மாண்டமாய் ஒரு வீட்டைக் கட்டி அவர் கிரகப் பிரவேசமும் செய்துள்ளார். 

’லெஜெண்ட் சரவணன்’  எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த மூன்றடுக்கு மாளிகை ஒரே நேரத்தில் ஏராளமானோர் தங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.  சமையல் அறையே ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ளது. ஒரே நேரத்தில் ஐம்பதுக்கும் மேலானவர்கள் சாப்பிடும் வகையில் பிரம்மாண்ட டேபிள் - விலை உயர்ந்த சேர்கள். இத்தனைக்கும் இந்த வீடு சின்ன வீடு தானாம்.

 சென்னையில் வசிக்கும் அண்ணாச்சி, எப்போதாவது சொந்த ஊருக்குச் சென்றால் ஓரிரு நாட்கள் தங்கி ஓய்வெடுக்க இந்த இந்த வீட்டை கட்டியுள்ளார். அண்ணாச்சி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இந்த வீட்டில் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இரட்டை இயக்குநர்களான ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் அவர் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும், கதாநாயகியாக நடிக்க நயன்தாராவிடம்  பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.