கதாநாயகன் ஆனார் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி! அஜித் - விக்ரம் படத்தை எடுத்தவர்கள் தான் டைரக்டர்!

சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அவர்கள் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கான பூஜை இன்று போடப்பட்டது .


சரவணா ஸ்டோரின் விளம்பரங்களில் நடித்து புகழ் பெற்றவர் சரவணா ஸ்டோரின் உரிமையாளர் சரவணன். இவர் முன்னதாக சரவணா ஸ்டோரின் விளம்பரங்களில் நடிகை தமன்னா மற்றும் ஹன்சிகாவுடன் சேர்ந்து நடித்து இருந்தார். இதனால் இவர் விரைவில் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பார் என்ற வதந்தி பரவியது.

இந்நிலையில் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அவர்கள் கதாநாயகனாக நடித்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை இன்று சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் போடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை ஜேடி ஜெர்ரி என்ற இயக்குனர்கள் இயக்குகின்றனர். இவர்கள் அஜித், விக்ரமை வைத்து உல்லாசம் படத்தை எடுத்தவர்கள். 

புரோடக்சன் நம்பர் 1 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் நாயகியாக புதுமுகம் கீதிகா திவாரி நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் பிரபு, விவேக் ,நாசர் ,தம்பி ராமையா, விஜயகுமார், கோவை சரளா, மயில்சாமி ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

மேலும் இந்த திரைப்படத்தின் படபிடிப்பு சென்னை, பொள்ளாச்சி மற்றும் ஹிமாலயாஸ் ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள இடங்களில் நடத்த உள்ளதாக திட்டமிட்டுள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசை அமைக்க உள்ளார். ரூபன் எடிட்டர் ஆகவும் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.