சேரனை பார்த்தாலே டென்சன் ஆவது ஏன்? சித்தப்பு வெளியிட்ட 1999 செண்டிமென்ட் பிளாஸ்பேக்!

பிக் பாஸ் வீட்டில் நடிகர் சரவணனுக்கும் இயக்குனர் சேரனுக்கும் இடையே தொடக்கம் முதலே பனிப்போர் நிலவி வந்தது .


இந்நிலையில் நேற்றைய முன் தினம் நடிகர் சரவணன் இயக்குனர் சேரனை ஒருமையில் பேசினார் . இதனை சற்றும் எதிர்பாராத பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்கள்  மற்றும் ரசிகர்கள்  பெரும் அதிர்ச்சி அடைந்தனர் .

பிக் பாஸ் வீட்டில் இயக்குனர் சேரன் மற்றும் நடிகர் சரவணன் இருவர் மட்டுமே அனைத்து பிரச்சனைகளையும் எளிதாக கையாண்டு வருகின்றனர் .  இந்நிலையில் சரவணன் மற்றும் சேரனுக்கு இடையிலான மோதல் பிக் பாஸ் வீட்டை  அதிரவைத்துள்ளது .

 இந்த பிரச்சினை பற்றிய பேச்சு பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களுக்குள் எழுந்தபோது , நடிகர் சரவணன் இயக்குனர் சேரன் மீது ஈகோ ஏற்படக் காரணமான நிகழ்வைப் பற்றி கூறினார்.

1991 ஆம் ஆண்டு நான் சென்றுகொண்டிருந்த கார் செங்கல்பட்டு அருகே பஞ்சர் ஆனது . அந்த நேரத்தில் அந்தப் பக்கம் சென்று கொண்டிருந்த சேரனிடம் , எனக்கு பணக்கஷ்டம் இருந்ததால் உங்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டிருந்தேன். ஆனால் அதற்கு அவர் உண்டு இல்லை என்று சொல்லாமல் , இவ்வளவு உயரத்தை பார்த்த நடிகர் நீங்கள் இந்த சிறுவனிடம் வாய்ப்பு கேட்கிறீர்களே என்று சேரன் கூறியதாக சரவணன் சொன்னார் . இந்த நிகழ்வு என்னை பெரிதும் காயப்படுத்தியதாக நடிகர் சரவணன் கூறினார் . 

ஆகவே இந்த சம்பவத்தால் தான் நடிகர் சரவணன் மற்றும் இயக்குனர் சேரன் இவர்களுக்கு இடையே பனிப்போர் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .