சாரா அலி கான் ஹிந்தி சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகை ஆவார். இவர் பாலிவுட்டின் பிரபல நட்சத்திரமான சாயிப் அலி கானின் மகள் ஆவார்.
இளம் நடிகருடன் நெருக்கமான காட்சி! கரும்பு தின்ன கூலியா என கேட்ட பிரபல நடிகரின் மகள்!
நடிகை சாரா அலி கானும் நடிகர் கார்த்திக் இருவரும் இணைந்து வெளியே வந்தாலே அது நெட்டிசன்கலால் பெரிதும் பேசப்படுகிறது.
இந்த ஜோடி தற்போது அவர்களின் அடுத்த திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர். இந்நிலையில் நடிகர் கார்த்திக் ஆரியன் "பதிபத்தினி ஆர் ஓ" என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது லக்னோவில் நடைபெற்று வருகிறது . நடிகை சாரா அலி கான் கார்த்திகேயனை பார்ப்பதற்காக லக்னோவிற்கு சென்றுள்ளார்.
அங்கு இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் காட்சி அமைக்கப்படுவதை பார்த்து ரசித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து சாரா அலி கான் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசுகையில் கேதர்நாத் திரைப்படத்தில் கார்த்திக் உடன் நடித்த தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.
அப்போது கார்த்திக்குடன் இணைந்து நடித்த அனுபவத்தை பற்றி பேசும் போது," என்னால் நம்பவே முடியவில்லை கார்த்தியுடன் நடிப்பதற்கு நான் சம்பளமும் பெறுகிறேன் என்பதை நினைத்துப் பார்க்கும்போது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.. கரும்பு தின்ன கூலியா?? " என்பது போல் இது அமைந்திருக்கிறது என்று கூறினார் சாரா அலி கான்.