ஆண் நண்பரை அழைத்துச் செல்ல விமான நிலையம் ஓடோடி வந்த பிரபல நடிகரின் மகள்! புகைப்படம் வைரல்!

பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகையான சாரா அலி கான் மற்றும் நடிகர் கார்த்திக் ஆரியன் ஆகிய இருவரும் மிகவும் பிரபலமாகப் பேசப்படும் ஜோடியாக திகழ்கின்றனர்.


இவர்கள் அவ்வப்போது ஒன்றாக சுற்றி வரும்  புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவுவதும் வழக்கமாக கொண்டுள்ளது. ஒரே காரில் பயணிப்பது ஒன்றாக ஹோட்டலில் உணவருந்த செல்வது பார்ட்டிகளை அட்டென்ட் செய்வது என பல இடங்களில் பொதுமக்கள் கண்களில் சிக்கியுள்ளனர் இந்நிலையில் இவர்கள் செய்த   இந்த புதிய செயல்  ரசிகர்களை மேலும் சந்தேகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

நடிகர் கார்த்திக் ஆரியன் தற்போது பதி பத்தினி  என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப் படத்தின் சூட்டிங் ஆனது கடந்த வாரம் முழுவதும் லக்னோவில் நடைபெற்றது இதனை முடித்துக் கொண்டு மீண்டும் மும்பை திரும்பிய கார்த்திக் கடந்த வியாழக்கிழமை அன்று வந்து சேர்ந்தார். 

சாரா அலி கான் நடிகர் கார்த்திக்கை பிக்கப் செய்வதற்காக விமான நிலையத்திற்கு  தன் காரில் சென்றார். இருவரும் ஒன்றாக இணைந்து காரில் பயணிக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

அந்தப் புகைப்படங்களில் சாரா அலி கான் வெட்கப்படுவதை போன்று காட்சி அளிக்கிறார் அவரது ரசிகர்கள் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

தற்போது சாராவும் கார்த்திக்கும்  இணைந்து இம்தியாஸ் அலி அவர்களின் திரைப்படத்தில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.