அரசியல்வாதிகளுக்குநோ என்ட்ரி! போலீஸ் ஸ்டேசனில் பேனர் வைத்த இன்ஸ்..! குவியும் பாராட்டு!

சங்கராபுரம் காவல்துறையினர் செய்த அறிவிப்பானது அப்பகுதி மக்களிடையே பாராட்டுகளை பெற்றுள்ளது.


சங்கராபுரம் பகுதியில் தங்களது குறைகளை தீர்த்து கொள்வதற்காக மக்கள், இடைத்தரகர்களின் மூலம் காவல்நிலையத்திற்கு வரும் பழக்கத்தை கொண்டிருந்தனர். இது காவல்துறையினருக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் காவல்துறை அதிகாரிகள், காவல்நிலையத்தின் வாயிலில் வினோதமான முறையில் ஒரு அறிவிப்பு பேனரை வைத்திருந்தனர். 

அதாவது, "பொது மக்களாகிய உங்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு காவல்துறை அதிகாரிகள் தயாராக உள்ளோம். நீங்கள் தயவுசெய்து இடைத்தரகர்களின் மூலம் எங்களை அணுகாதீர்கள். எங்களுக்கு பொதுமக்கள் தான் முக்கியமே தவிர இடைத்தரகர்கள் இல்லை. உங்களின் பிரச்சினைகளை நேரடியாக வந்து உங்களிடம் கூறலாம். இடைத்தரகர்களுக்கு இங்கு அனுமதியில்லை" என்று அச்சிடப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பினால் அப்பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதுநாள் வரை இருந்த ஐயம் தற்போது நீங்கிவிட்டதாக அப்பகுதி பொதுமக்கள் கருதுகின்றனர்.

இந்த அறிவிப்பானது சங்கராபுரம் பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.