பெண்களுக்கு ஓர் நற்செய்தி! அந்த சமாச்சாரத்தின் விலையை விரைவில் குறைக்கிறது மோடி அரசு!

இந்தியாவில் தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள 384 மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.


பெண்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய சுகாதாரப் பொருட்களான சானிட்டரி நாப்கின்கள், சோப்புகள் மற்றும் கிருமிநாசினி போன்றவற்றின் விலை விரைவில் குறைக்கப்பட உள்ளது.

இந்த அத்தியவாசிய மருத்துவ பொருட்கள் மற்றும் உபகரணங்கள் தற்போது தேசிய மருந்து விலை ஆணையம் நிர்ணயிக்கும் விலையில் விற்பனையாகி வருகிறது. ஆனால் இந்த பட்டியலை மறுஆய்வு செய்யும் பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாகவும், மருத்துவ உபகரணங்கள் மற்றும் சுகாதார பொருட்களுக்கு தனி பட்டியல் தயாரிக்கப்பட்டும் வருகிறதாக தகவல் வெளியாகி உள்ளது.

அத்தியாவசிய சுகாதார பொருட்களின் பட்டியலை தயாரிக்கும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளதால் 2 இரண்டு மாதத்தில் இந்த பட்டியல் வெளியிடப்பட வாய்ப்பு உள்ளது. இரு பிரிவுகளாக தயாரிக்கப்பட உள்ள இந்த பட்டியல் முதல் பிரிவில் இருக்கும் பொருட்களின் விலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் இரண்டாவது பிரிவில் இருக்கும் பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதிய விழிப்புணர்வு இல்லாததாலும் விலை அதிகம் காரணமாகவும் கிராமங்களில் ஏழைப் பெண்கள் சானிட்டரி நாப்கின்களுக்கு பதிலாக துணியை பயன்படுத்தும் நிலை தற்போதும் உள்ளதால் இந்த விலை குறைப்பு நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழைப் பெண்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அதை சரி செய்ய சானிட்டரி நாப்கின்கள், கர்ப்பத் தடை மாத்திரை, காப்பர் டி எந்திரம் உட்பட அனைத்து அத்தியாவசிய சுகாதார பொருட்களும் மலிவு விலையில் மக்களுக்கு கிடைக்க விலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த விலை பட்டியலை நிதி ஆயோக்கின் மலிவு விலை மருந்துகள் தொடர்பான குழுவின் தலைவர் இறுதி செய்ய உள்ளார். விலை குறைக்கப்படும் போது அத்தியாவசிய பொருட்களின் தேவை, மக்களுக்கு எளிதிலும் விலை குறைவாக கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் எல்லா நேரங்களிலும், சுகாதாரத் துறையில் அணுகக் கூடிய,சுகாதார தயாரிப்புகளின் பல அம்சங்கள் குறித்து உயர் வல்லுனர்கள் குழு கலந்துரையாடி வருகிறார்கள். அதாவது எந்த வகையான சோப்பை சுகாதாரப் பிரிவின் கீழ் வைக்க வேண்டும் என்பதுதான் அது.