விஜயுடன் மோத வேண்டாம்! தீபாவளி ரேசில் பின்வாங்கிய விஜய்சேதுபதி! சங்கத் தமிழன் ரிலீஸ் டேட் மாற்றம்!

நடிகர் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் திரைப்படம் தீபாவளி ரேஸில் இருந்து விலகி வருகிற அக்டோபர் மாதம் 4ம் தேதி திரைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது .


விஜயா புரொடக்ஷன் தயாரிப்பில் ,விஜய் சந்திரன் இயக்கத்தில் , நடிகர் விஜய்சேதுபதி சங்கத்தமிழன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக இரட்டைவேடங்களில் நடிக்கிறார் . சங்கத்தமிழன் திரைப்படத்தின் டிரைலர் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி வெளியாகியது . இப்படத்தின் டிரைலர் அனைத்து ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது . 

சங்கத்தமிழன் திரைப்படம் தீபாவளிக்கு பிகில் மற்றும் கைதி திரைப்படங்கள் உடன் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விஜய் படத்துடன் மோத வேண்டாம் என்று முடிவெடுத்த படக்குழுவினர் சங்கதமிழன் படத்தை தீபாவளிக்கு முன்னதாகவே வெளியிட முடிவு செய்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

இதன்படி இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் 4ம் தேதி திரைக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது . சங்கத்தமிழன் திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .