விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன்! டைரக்டர் வெளியிட்ட செம அப்டேட்!

நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் சங்கத் தமிழனின் படத்தின் படப்பிடிப்புக்கள் முடிவடைந்து விட்டதாக அந்த படத்தின் இயக்குனர் விஜய் சந்தர் கூறியுள்ளார் .


வாலு மற்றும் ஸ்கெட்ச் திரைப்படங்களை இயக்கிய விஜய் சந்தர் சங்கத்தமிழன் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.இந்தத் திரைப்படத்தை விஜயா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது . 

சங்கத் தமிழன் படத்தில் முதல் முறையாக விஜய் சேதுபதி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் . இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நிவேதாபெத்துராஜ் மற்றும் ராசி கன்னா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார் .

இந்த படத்தின் இயக்குனர் விஜய் சந்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் சங்கத் தமிழன் திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் ஆகஸ்ட் 17 ஆம் தேதியோடு நிறைவடைந்து விட்டதாக ட்வீட் செய்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதிக்கு  சமீபத்தில் நடந்த இந்தியன் பிலிம் பெஸ்டிவல் நிகழ்ச்சியில் சிறந்த  நடிகருக்கான விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .