மனைவி கண்முன்னே மச்சினிச்சியுடன்...! பிக்பாஸ் சாண்டி வீட்டில் என்ன தான் நடக்கிறது? வீடியோ உள்ளே!

பிரபல நடன இயக்குனர் சாண்டி தன்னுடைய மச்சினிச்சியுடன் இணைந்து வாள் சண்டை போடும் வீடியோ பதிவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.


பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியின் மூலமாக நடன இயக்குனராகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் சாண்டி ஆவார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தற்போது திரைப்படங்களில் முன்னணி கதாநாயகர்களுக்கு நடனம் அமைக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார். இவர் சொந்தமாக ஒரு நடன பள்ளியையும் இயக்கிவருகிறார். மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று இரண்டாவது பரிசை தட்டிச் சென்றார். இதன் மூலம் சாண்டியின் ரசிகர் பட்டாளம் அதிகரித்தது என்று தான் கூற வேண்டும்.

உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸின் கோரப்பிடியிலிருந்து தப்பிப்பதற்காக நமது நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே தன்னுடைய குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வரும் நடன இயக்குனர் சாண்டி தன்னுடைய மச்சினிச்சியுடன் இணைந்து நடனமாடி சில வீடியோக்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.

அந்த வகையில் சாண்டி தற்போது ஒரு வைரல் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சாண்டி மாஸ்டர் தனது மனைவியின் முன்னே தனது மச்சினிச்சியுடன் வால் சண்டை போடுகிறார். இந்த வீடியோ அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பட்டு வருகிறது.