ஊரடங்கு போட்டாலும் போட்டாங்க..! மச்சினிச்சியோட ஒரே குத்தாட்டம் தான்..! பிக்பாஸ் சாண்டியின் அடுத்த வீடியோ!

தற்போது நிலவி வரும் ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நடன இயக்குனர் சாண்டி தன்னுடைய மச்சினிச்சியுடன் இணைந்து மீண்டும் குத்தாட்டம் போடும் வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.


உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸின் கோரப்பிடியிலிருந்து தப்பிப்பதற்காக நம்முடைய மத்திய அரசாங்கம் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நடன இயக்குனர் சாண்டி , திரை உலகில் பல முன்னணி ஜாம்பவான்களுக்கு நடனம் பயிற்றுவிப்பதை தன்னுடைய பணியாக செய்து வருகிறார்.

இவர் சொந்தமாக ஒரு நடன பள்ளியையும் இயக்கிவருகிறார். மேலும் கடந்த ஆண்டு வெளியான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று இரண்டாவது பரிசை தட்டிச் சென்றார். இதன் மூலம் சாண்டியின் ரசிகர் பட்டாளம் அதிகரித்தது என்று தான் கூற வேண்டும்.

ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே தன்னுடைய குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வரும் நடன இயக்குனர் சாண்டி தன்னுடைய மச்சினிச்சியுடன் இணைந்து முக்காபுலா பாடலின் ரீமேக்க்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார். இந்த வீடியோ பதிவு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ பதிவானது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

சமீபத்தில் சாண்டி மற்றும் அவரது மச்சினிச்சி ஆகிய இருவரும் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் வரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்டனர். அந்த வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.