பிக்பாஸ் டீமில் மீண்டும் இணைந்த சித்தப்பு சரவணன்..! கவின் - சாண்டி இணைந்து செய்த அதிரடி சரவெடி மேட்டர்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற சாண்டி மற்றும் கவின் , பிக் பாஸ் போட்டியிலிருந்து சர்ச்சைக்குரிய முறையில் வெளியேற்றப்பட்ட சரவணனை நேரில் சந்தித்துள்ளனர்.


பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் முகேன் டைட்டிலை வென்றார். பிக்பாஸ் போட்டியில் தொடக்கத்திலிருந்தே மிகவும் வலிமையான போட்டியாளராக விளங்கியவர்களில் நடிகர் சரவணனும் ஒருவராவார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்தே நடிகர் சரவணன், சாண்டி, கவின் ஆகியோர்கள் நெருக்கமாக பழகி வந்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதால் , நடிகர் சரவணன் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிக்பாஸ் போட்டியில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார். இதனால் கவின் மற்றும் சாண்டி நடிகர் சரவணனின் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கதறி அழுதனர். 

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்த பிக் பாஸ் பைனலில் சாண்டி இரண்டாமிடம் பெற்றார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு சாண்டி மற்றும் கவின் இருவரும் இணைந்து நடிகர் சரவணன் அவர்களை நேரில் சந்தித்துள்ளனர்.

மேலும் அந்த சந்திப்பில் எடுத்த புகைப்படத்தை சாண்டி தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தில் ஒருவழியாக உங்களை பார்த்து விட்டோம் எனவும் உங்களை மிகவும் இவ்வளவு நாள் மிஸ் செய்தோம் எனவும் சாண்டி கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .