பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
தர்ஷன் எவிக்ட் ஆக காரணமே ஷெரீன் தான்! காதலி சனம் வெளியிட்ட சீக்ரெட்!

இதனால் பெரும்பாலான பிக்பாஸ் ரசிகர்கள் மற்றும் தர்ஷன் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர் . பிக்பாஸ் வீட்டிற்குள் தர்ஷன் இருக்கும்போது , அவரின் காதலி சனம் ஷெட்டி பல்வேறு ட்வீட்களை சமூக வலைதளங்களில் செய்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி விட்டு தர்ஷன் வெளியேறியதை அடுத்து சனம் ஷெட்டி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இது அழகில்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தர்ஷன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதற்கு ஷெரின் தான் முக்கிய காரணம் என சனம் செட்டி அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பிக்பாஸ் வீட்டில் ஷெரின் நடந்துகொண்ட விதம் நியாயமற்ற முறையிலும், செயற்கையாக இருந்ததாகவும் சனம் ஷெட்டி கருத்து தெரிவித்துள்ளார் .
சமீபத்தில் தனது கையில் ஏற்பட்டுள்ள கட்டியை சரி செய்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை ட்விட் செய்த சனம் செட்டி , தனது கருத்துக்களை கூறும் போது எனக்கு மிரட்டல்கள் தொடர்ச்சியாக வருவதாகவும் கூறியிருக்கிறார். நான் கூறிய கருத்துக்கும் , எனது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை . மற்றவர்களைப் போல எனது கருத்துக்களை கூற எனக்கு எல்லாவிதமான உரிமையும் உள்ளது எனவும் நடிகை சனம் ஷெட்டி கூறியுள்ளார் .