திடீர் தீடீரென வெடித்துச் சிதறும் சாம்சங் எஸ்10 5ஜி போன்!

திடீரென்று மொபைல் போன் வெடித்துப்போனதால் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சாம்சங் கேலக்சி நோட் 7 விற்பனையிலிருந்து திடீரென்று மாயமாகி போனது அனைவரும் அறிந்ததே.


இந்த அசம்பாவிதத்திற்கு பிறகு சாம்சங் நிறுவனம் மிகச்சிறந்த பேட்டரி நுணுக்கங்களை கையாண்டுள்ளனர். இந்த நுணுக்கங்களாள் நல்ல பயனையும் பெற்றன்னர். எந்த ஒரு அசம்பாவிதவும் பேட்டரி கோளாறுகளால் நடைபெறவில்லை. ஒன்று அல்லது இரண்டு அசம்பாவிதங்கள் எங்கேயாவது ஏற்பட்டிருக்கலாம்.

இந்த தருவாயில் தென்க்கொரியாவில் இந்த மொபைல் போனை உபயோகிக்கும் நபர் ஒரு சிலவீடியோக்களை பகிர்ந்துள்ளது அந்த நிறுவனத்திற்கு பேரதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. அதாவது சாம்சங் கேலக்சி S 10 5G என்ற மொபைல் போன் திடீரென வெடித்து எரிந்துபோனதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.  இந்த மொபைல் போனில் அதிவேகமாக சார்ஜ் ஏறும் பண்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தச்சம்பவத்திற்க்கு என்ன காரணம்  என்பது இதுவரை தெரியவில்லை. மட்டரகமான சார்ஜ்ர்கள் உபயோகிக்கப்பட்டதா என்பதை ஆராய்ந்து வருகின்றனர்.ஆனால் சாம்சங் நிறுவனம் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. கடந்த இரு வருடங்களாக எந்த ஒரு அசம்பாவிதவும் ஏற்படாததால் நாம் இவர்களை நம்ப வேண்டியதாகயுள்ளது.