11 வருடங்களுக்கு பிறகு உலகக்கோப்பையில் மீண்டும் நிகழும் அதே அதிசயம்!

2008ம் ஆண்டு நடந்த 18வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கான ஜூனியர் உலகக்கோப்பை போட்டியின் அரை இறுதி போட்டியில் நடந்த ஒரு ஆச்சர்யமூட்டும் சம்பவம் தற்போது நடந்து வரும் உலகக்கோப்பை போட்டியின் அரை இறுதி போட்டியிலும் யாரும் எதிர்பார்க்காதவகையில் நடைபெற்றுள்ளது.

2008ஆம் ஆண்டு நடந்த  ஜூனியர்  உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின . ஜூனியர் உலகக்கோப்பை தொடரில்  இந்திய அணியின்கேப்டனாக  விராட் கோலி  இருந்தார் . இதே போல ஜூனியர் உலகக்கோப்பை தொடரில்  நியூசிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சன் கேப்டனாக இருந்தார் .

இந்த இரு அணிகளுக்கும் இடையே நடந்த  அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வென்று  இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது .

இதே போன்ற சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் உலக கோப்பை  அரையிறுதி போட்டியிலும் ஆச்சரியப்படும் வகையில் நடைபெற்றுள்ளது. இதில் உள்ள ஒற்றுமை என்னவென்றால் ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை போலவே தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதியிலும் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளே  மோதவுள்ளன. 

மேலும் இந்த இரு அணிகளுக்கும் ஜூனியர் உலகக்கோப்பை தொடரில் கேப்டனாக செயல்பட்ட விராட் கோஹ்லி மற்றும் கேன் வில்லியம்சனே  தற்போது நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரின் அரை இறுதி போட்டியில் கேப்டனாக செயல்படவுள்ளனர். 

ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சுமார் 11 வருடங்களுக்கு முன்பு  நடந்த அதே சம்பவம் இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் எந்த வித மாற்றமுமின்றி நடைபெறுகிறது.

மேலும் ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்டின் அரை இறுதி போட்டியில் இந்திய அணி நியூஸிலாந்து அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது.

அதே போல இந்த உலகக்கோப்பை கிரிக்கெட்டின் அரை இறுதி போட்டியிலும் இந்திய அணி நியூஸிலாந்து அணியை வென்று உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டிக்குள் நுழையும் என இந்திய ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

2008ம் ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தென்னாபிரிக்கா அணியை வென்று உலககோப்பை தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.