கொதித்துக் கொண்டிருந்த சாம்பார்..! அண்டாவுக்குள் தவறி விழுந்த சிறுவன் துடிதுடித்து பலியான பரிதாபம்!

கொதித்து கொண்டிருந்த சாம்பார் பாத்திரத்தில் சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவமானது தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தெலங்கானா மாநிலத்தில் ரங்கா ரெட்டி என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் மிகப்பெரிய விழா ஒன்று நடந்து கொண்டிருந்தது. விழாவிற்கு சமையல் செய்வதற்காக மிகப்பெரிய பாத்திரத்தில் சாம்பார் செய்து கொண்டிருந்தனர்.

அந்த இடத்திற்கு அருகே 3 வயது சிறுவன் ஒருவன் விளையாடிக்கொண்டிருந்தான். விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், திடீரென்று நிலைதடுமாறி கொதித்து கொண்டிருந்த சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்துவிட்டான்.

இந்த காட்சியை பார்த்த சிறுவனின் தந்தை அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சிறுவனை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு மருத்துவர்கள் குழந்தைக்கு தீவிர சிகிச்சை கொடுத்தனர். இருப்பினும் சில மணி நேரங்களிலேயே சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.