பல நன்மைகள் தரக்கூடிய நாவை சுண்டியிழுக்கும் திருநெல்வேலி மிளகு குழம்பு !

சமையற் கலையில், குறிப்பாக பிராமணர்கள் சமையலில் மூன்று விதம் உண்டு.


தஞ்சாவூர், திருநெல்வேலி, பாலக்காடு என்ற மூன்று வகை சமையல்களிலும் சுவையும், மணமும், ஆரோக்கியமாகவும், மனதிற்கொண்டு சமைக்கப்படுவது என்றால் மிகையல்ல. சாத்விக் சமையல்முறை என்றும் சொல்லலாம். இதில் சேர்க்கப்படும் சமையல் பொருட்கள் அனைத்தும் மூன்று சமையலிலும் சேர்ப்பார்கள். ஆனால் அதே சமயத்தில், அந்த பொருட்கள் மாறுபட்டு அந்த மண்ணின் சுவையை கொண்டு வருவது சிறப்பு.

இங்கு நாம் பார்க்கப்போவது திருநெல்வேலி பாரம்பரிய சமையலில் மிளகு குழம்பு எப்படி செய்வது என்று.

தேவையான பொருட்கள் :-

2 ஸ்பூன் துவரம் பருப்பு

1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு

1/4 ஸ்பூன் பெருங்காயம்

1 கைப்பிடி கருவேப்பிலை

1 சின்ன லெமன் சைஸ் புளி

1 டேபிள் ஸ்பூன் மிளகு

1 காய்ந்த மிளகாய்

தாளிக்க :-

1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்

1 ஸ்பூன் சீரகம்

1 டீஸ்பூன் கடுகு

1 ஆர்க் கருவேப்பிலை

செய்முறை :-

புளியை கொஞ்சம் தண்ணீர் விட்டு மைக்ரோவேவ் ஓவனில் இரண்டு நிமிடம் இளக்கி வைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு துவரம் பருப்பு உளுத்தம் பருப்பு மிளகாய் வத்தல் மிளகு கறிவேப்பிலை சேர்த்து வறுக்கணும். ஆறிய பின் மிக்ஸியில், வறுத்த சாமான்களை ஒரு சுற்று சுற்றி, பின்பு புளியையும் சேர்த்து தண்ணீர் விட்டு நன்கு பேஸ்ட்டாக அரைக்கணும்.

அரைத்த விழுதை கொஞ்சம் தண்ணீர் விட்டு, உப்பு போட்டு கரைத்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் இரண்டு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணை விட்டு, கடுகு, ஜீரகம், கறிவேப்பிலை போட்டு, கரைத்து வைத்த கலவையை விட்டு இரண்டு மூன்று கொதிவிட்டு, ஆப்பண்ணி, ஒரு ஸ்பூன் நல்லெண்ணை விட்டு இறக்கவும்.

மேல் சாமான்களை நன்கு வறுத்துவிட்டபடியால், ரொம்ப கொதிவிட்கூடாது. அப்போது தான் நல்ல மிளகு ப்ளேவருடன் டேஸ்டாக இருக்கும். சிலர் மிளகு குழம்பை இறக்குமுன் அல்லது இறக்கியபின் ஒரு ஸ்பூன் தேன் விடுவார்கள். சிலர் கொதிக்கும் போது சிறு உருண்டை வெல்லம் சேர்ப்பார்கள். ஆனால் இவை எதையும் சேரக்காமல் செய்வதுதான் சுவை.

மிளகு குழம்பிற்கு பெஸ்ட் காம்பினேஷன் பருப்பு துவையலும், அரக்கீரை/முளக்கீரை மசியல், அல்லது தேங்காய் அரைத்த கீரை. முளைக்கீரை/அரைக்கீரையை அலசி, உப்பு, பெருங்காயம் போட்டு வேகவைத்து, வெந்தபின் மசித்து, கைக்கரண்டியில், தேங்காய் எண்ணெயில் ஜீரகம், உளுந்து, காய்ந்த மிளகாயை கிள்ளி தாளித்துக்கொட்டினால் செம்ம டேஸ்ட். கடுகு தாளிக்கக் கூடாது. வத்தக்குழம்பிற்கு சூப்பர் காம்பினேஷன்.

தயிர்சாதத்திற்கு கீரையும் வத்தக்குழம்பபை தட்டில் விட்டு விரலால் கலந்து தொட்டு சாப்பிடுவது, தொன்று தொட்டு பிராமணர்கள் கடைபிடிக்கும் முறை. முளக்கீரையை விட அரைக்கீரைதான் மசியலுக்கு ஏற்றது.