ஆடைகள் களைந்து வியர்த்துவிடும்..! அந்த நடிகருடனான நடன அனுபவம் குறித்து சமந்தா வெளியிட்ட சீக்ரெட்!

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் நடிகை சமந்தா.


இவர் தமிழ் சினிமாவில் பானா காத்தாடி, நீ தானே என் பொன்வசந்தம், தெறி , கத்தி , யூ டர்ன் போன்ற பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் . 

கடந்த 2011 ஆம் ஆண்டு நாக சைதன்யா உடன் திருமணம் செய்துகொண்ட நடிகை சமந்தா திருமணத்துக்கு பிறகும் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார் . குறிப்பாக திருமணத்திற்குப் பிறகு ஜிம்முக்கு சென்று உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக காணப்படுகிறார் நடிகை சமந்தா. 

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை சமந்தாவிடம் யாருடன் உங்களுக்கு நடனமாடுவது கடினமாக இருக்கும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகை சமந்தா , கண்டிப்பாக ஜூனியர் என்டிஆர் உடன் நடனமாடுவது தான் மிகவும் கடினமாக இருக்கும் .

மேலும் ஜூனியர் என்டிஆர் கடினமான நடன அசைவுகளை கூட எளிதாக ஆடி விடுவார் . ஆனால் நான் பல முறை ரிகர்சல் செய்து விட்டுத்தான் அவருடன் ஆடுவதற்கு செல்வேன் . அதனால் அவருடன் நடனமாட சென்றாலே ஆடைகள் களைந்து , வியர்த்துவிடும். அந்த அளவிற்கு ஜூனியர் என்டிஆர் சிறப்பாக நடனம் ஆடுவார் என்று நடிகை சமந்தா கூறியுள்ளார் .