என்னுடைய முதல் கணவர் இவர் தான்! சமந்தா வெளியிட்ட பகீர் புகைப்படம்! அதிர்ச்சியில் நாக சைத்தன்யா ரசிகர்கள்!

தமிழ் , தெலுங்கு என பல மொழிகளில் நடித்து மிகப் பிரபலமானவர் நடிகை சமந்தா.


நடிகை சமந்தா தமிழ் திரை உலகில் முதன்முதலில் "பானா காத்தாடி" என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதற்குப் பின்பு பல முன்னணி நடிகர்களுடன் நடித்து அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகையாக வலம் வந்தார். இதற்குப் பின்பு தெலுங்கு சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்தார் நடிகை சமந்தா.

தெலுங்கு உலகின் முன்னணி நடிகரான நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா உடன் இணைந்து தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடித்திருந்தார். அப்போது இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து பின்னர் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்த பின்பும் சமந்தா ஆக்டிவாக பல திரைப்படங்களில் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வருகிறார். சமீபத்தில் தன் கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்த மஜிலி திரைப்படமும் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.

சமந்தா எப்பொழுதும் சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஒரு நடிகை ஆவார். எப்போதுமே கவர்ச்சியான பல புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர். இப்படியாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சமயங்களில் பல சர்ச்சைகளிலும் சிக்கி கொள்பவர் ஆவார்.

அந்த வகையில் தற்போது நடிகை சமந்தா வெளியிட்டுள்ள ஒரு புகைப்படமானது சமூகவலைதளத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அதாவது சமந்தாவுக்கு செல்லப்பிராணிகள் என்றால் மிகவும் இஷ்டம். தன்னுடைய செல்ல பிராணியான நாய்க்குட்டி ஒன்றுக்கு கழுத்தில் " நம்பர் 1 ஹஸ்பண்ட்" என்று எழுதப்பட்டிருந்த பேட்ச் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த பேஜ் அணிந்திருக்கும் போது எடுத்த புகைப்படங்களை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த நாக சைதன்யாவின் ரசிகர்கள் கடும் கோபத்தில் சமந்தாவை கண்டபடி கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சில ரசிகர்கள் கணவரிடம் மரியாதையாக நடந்து கொள்ள கற்றுக் கொள்ளுங்கள் என்றும் கமெண்ட் செய்துள்ளனர். தற்போது இந்த செய்தியானது சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.