அது போடாமல் நான் இப்படித் தான் இருப்பேன்..! திருமணமான நடிகை சமந்தா வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்களுக்கு தெரிந்த அந்த விஷயம்!

பிரபல நடிகை சமந்தா மேக்கப் போடாமல் தனது புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா ஆவார். தமிழில் ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வரும் இவர் தெலுங்கு மொழியிலும் கலக்கி வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை இவர் திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்த பின்பும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிகை சமந்தா நடித்து வருகிறார்.

திருமணத்திற்கு பிறகு நடிகை சமந்தா ஜிம்முக்கு சென்று உடல் எடையை குறைத்து மிகவும் ஃபிட் ஆக இருந்து வருகிறார். தற்போது நிலவி வரும் ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வீட்டிலேயே பிரபலங்கள் இருப்பதால் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஷேர் செய்து வருகின்றனர். 

அந்த வகையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை சமந்தா தற்போது புது விதமாக மேக்கப் போடாமல் தனது புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் சமந்தாவா இது என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். அவரது துணிச்சலை கண்டு பல்வேறு ரசிகர்களும் அவர்களை பாராட்டி வருகின்றனர்.