குழந்தைக்கு ரெடியா? செய்தியாளர் கேட்ட கேள்வி! சமந்தா அளித்த செம பதில்!

சமந்தாவும் நாக சைதன்யாவும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.


நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டதற்கு பிறகும் சினிமாவில் தீவிரமாக நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு நடிகை சமந்தா ஜிம்முக்கு சென்று உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான தோற்றத்துடன் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

கிட்டத்தட்ட கல்யாணம் செய்துகொண்டு இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் , குழந்தை எப்போது என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு அதிரடியாக பதில் அளித்துள்ளார் நடிகை சமந்தா. 

திருமணம் ஆனதிலிருந்து குழந்தை எப்போது என்று பல்வேறு தரப்பினரும் என்னை சந்திக்கும் போது கேட்டு வருகின்றனர். அவர்கள் கேட்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் குழந்தை எப்போது பெற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கும் உரிமை எனக்கு இருக்கிறது. இந்தத் தலைமுறையினர் தங்களுக்கு பிடித்ததை மட்டுமே செய்து வருகின்றனர்.

 ஆகையால் எப்போதும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது நான் குழந்தை பெற்றுக் கொள்வேன் என்று நடிகை சமந்தா அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்