MDH சாம்பார் மசாலாவில் பாக்டீரியா! இல்லத்தரசிகளை அதிர வைக்கும் தகவல்!

அமெரிக்காவில் விற்கப்படும் சாம்பார் பொடியில் நச்சுப்பொருள் கலந்திருப்பதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவில் எம்.டி.ஹெச் என்ற நிறுவனத்தின் சாம்பார்பொடி பிரபலமாக விற்கப்பட்டு வருகிறது. ஐக்கிய அமீரகத்தை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் "ஆர்-பியூர் அக்ரோ ஸ்பெஷாலிடீஸ்" என்ற நிறுவனம் இந்த சாம்பார் பொடியை தயாரிக்கின்றது.

அமெரிக்காவின் உள்நாட்டு வர்த்தகர்கள் உடன் இணைந்து வடக்கு கரோலினா மாகாணத்திலுள்ள உள்ள கடைகளில் சாம்பார் பொடியானது விற்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் போன்ற பல நாடுகளிலும் இந்த நிறுவனமானது சாம்பார் பொடியை விற்று வருகிறது.

சென்ற வாரம் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்பட்ட இந்த சாம்பார் பொடியை அந்நாட்டு உணவு மற்றும் மருந்து முறைப்படுத்தும் குழு பரிசோதித்தது. அப்போது உடல்நலனை பாதிக்கக்கூடிய சால்மோனெல்லா பாக்டீரியா சாம்பார் பொடியில் இருந்ததை அந்தக்குழு உறுதி செய்தது.

இந்த பாக்டீரியாவானது நோய் எதிர்ப்பு சக்தியை வெகுவாக குறைத்து வயிற்றுவலி, தலைவலி, வயிற்றுப்போக்கு ஆகிய நோய்களை ஏற்படுத்தும் வல்லமை படைத்தது.

உடனடியாக சென்ற வாரத்தில் 3 முறைகள்  இறக்குமதி செய்யப்பட்டிருந்த அனைத்து சாம்பார் பொடி வகைகளையும் அந்த நிறுவனம் திரும்ப பெற்றுக்கொண்டது. நிறுவனம் தானாக முன்வந்து இந்த முயற்சியை எடுத்ததா இல்லை அமெரிக்கா நாடு வற்புறுத்தியதால் என்பது தெரியவில்லை.

2018-2019-ஆம் ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்டிருந்த சாம்பார்பொடி பாக்கெட்களில் 20 முறை இந்த பாக்டீரியா இருப்பதை முறைப்படுத்தும் குழுவானது கண்டறிந்துள்ளது.

இந்த சம்பவமானது அமெரிக்காவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.