திருமணம் செய்து கொள்ளாமலேயே குழந்தை! பிரபல நடிகரின் பகீர் முடிவு!

ஹிந்தி திரைப்பட உலகில் தனக்கு என திரளான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தான் சல்மான்கான்


சல்மான்கான் எங்கு சென்றாலும் இவரிடம் கேட்கப்படும் ஒரே கேள்வி "உங்களது திருமணம் எப்போது என்பது தான் ?"  இந்த கேள்விக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் சல்மான்கான் ஒரு முடிவு எடுத்துள்ளார்.

இந்த முடிவு எவரும் எதிர்பார்க்காத ஒன்று தான்.  சல்மான்கானிற்கு திருமணத்தின் மீது எந்த வித ஆசையும் இல்லையாம்.  ஆனால் குழந்தை மட்டும் வேணுமாம். ஆகையால் வாடகை தாய் முறையை பயன்படுத்தி குழந்தைகள் பெற்று கொள்ள  முடிவு செய்துள்ளார்.

ஆனால் இந்த முடிவு ஒன்றும் பாலிவுட் திரை உலகிற்கு புதிதல்ல.  ஏற்கனவே இந்த வரிசையில் ஷாருக் கான், அமீர் கான், கரண் ஜோகர் மற்றும் ஏக்தா கபூர் ஆகியோர் உள்ளனர்.இந்த வரிசையில் தற்போது சல்மான்கானும் சேரவுள்ளார். 

இவர் தற்போது தனது முன்னாள் காதலி கத்ரீனா கைப் உடன் "பாரத் "  திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் சல்மான்கான் தனது முன்னாள் காதலி கத்ரீனா கைப்பிற்கு விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.