மீண்டும் கர்ப்பம்! 2வது குழந்தைக்கு தயாரான பிரபல நடிகரின் தங்கை! மகிழ்ச்சியில் குடும்பம்!

பாலிவுட் நடிகரான ஆயுஷ் சர்மாவின் மனைவி அர்பிதா கான் ஷர்மா கர்ப்பமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின்  தங்கை அர்பிதா கான் ஆவார். சல்மான்கானின் தங்கை அர்பிதா கானுக்கும், பாலிவுட் நடிகர் ஆயுஷ் சர்மாவுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. 

மும்பையில் நடந்த 20வது IIFA எனப்படும் இந்தியன் இன்டர்நேஷனல் பிலிம் அகாடமி விருது வழங்கும் விழாவில் பாலிவுட் நடிகர் ஆயுஷ் சர்மாவும் அவரது மனைவியும் சல்மான்கானின் தங்கையுமான அர்பிதா காணும் பங்குபெற்றனர்.

நடிகர் ஆயுஷ் ஷர்மா அங்கு பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் , நானும் என் மனைவி அர்பிதா காணும் இரண்டாவது குழந்தைக்கு பெற்றோராக உள்ளோம் என்ற மகிழ்ச்சியான செய்தியை அவர் கூறியிருந்தார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு ஏற்கனவே 3 வயதில் மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.