சேலம் கொலை
25 வயசு கள்ளக்காதலியை போட்டுத்தள்ளிய 50 வயசு தாத்தா! உல்லாசத்துக்கு மறுத்ததால் கொடூரம்!
இவர்களின் தொடர்பை அறிந்த இரு குடும்பத்தினரும் இவர்கள் இருவரையும் கடுமையாக கண்டித்துள்ளனர். இதனால் ஷரீன் இனமுல்லாஹ்விடம் இருந்து சற்று ஒதுங்கி இருந்தார்.
இதற்கு ஆத்திரமடைந்த இனமுல்லாஹ் ஷரீனை சந்திக்க அவர் வேலை செய்யும் கடைக்கு நேரடியாக சென்று பேசியுள்ளார். இவரின் எந்த ஒரு பேச்சுக்கும் ஷரீன் ஒத்து வரவில்லை.
இதனால் கடும் கோபமடைந்த இனமுல்லாஹ், ஷரீனின் கழுத்து அறுத்து விட்டு கடிதம் ஒன்றில் இந்தக் கொலைக்கும் தற்கொலைக்கும் நானே பொறுப்பு என எழுதி வைத்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம், கடை உரிமையாளர் பாண்டியராஜன் தனது கடையை வந்து பார்க்கையில் நீண்ட நேரம் உள் பக்கமாக பூட்டி இருந்ததால் எவ்வளவோ முயற்சித்தும் திறக்க முடியவில்லை. பொலிசிடம் தகவல் கொடுத்து அவர்களை வரவழைத்து கடையை உடைத்து திறந்து பார்க்கையில் இந்த சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது. அதன் பிறகு விசாரணையில் கூடுதல் தகவல்கள் தெரியவந்துள்ளன.
மக்கள் பரபரப்பு நிறைந்த சேலம் ஜங்சன் பகுதியில் இந்த நிகழ்வு நடந்திருப்பது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது