இளம் ஹீரோவுடன் பிரபல நடிகரின் மூத்த மகள் நெருக்கம்! புகைப்படம் வைரல்!

பிரபல பாலிவுட் நடிகர்களான கார்த்திக் ஆர்யன் மற்றும் சாரா அலி கான் இமாச்சலபிரதேசத்தில் உல்லாசமாக இருப்பது போன்ற வெளியான புகைப்படம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இவர்கள் பிரபல பாலிவுட் இயக்குநரான இம்தியாஸ் அலியின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து படப்படிப்பை இமாச்சலபிரதேசத்தில்  படக்குழுவினர் திட்டமிட்டனர். அவ்வாறே படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர்.

தற்போது இருவரும் நெருக்கமாக இருக்கும்  புகைப்படம் ஒன்று வெளியாகி, சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கார்த்திக் ஆர்யன் மிகவும் சாதாரணமாகவும், சாரா அலி கான் மிகவும் கவர்ச்சியாகவும் இருக்கின்றனர்.

இவர்கள் நடிக்கவிருக்கும் படமானது, "லவ் ஆஜ் கல்" என்னும் திரைப்படத்தின் ரீமேக் போன்று எடுக்கப்பட உள்ளது. அந்த படத்தில்  தீபிகா படுகோனே, சைப் அலி கான் நடித்தனர் ‌என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் படத்தினை எதிர்பார்த்து பாலிவுட் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.