சூர்யா படப்பிடிப்பில் செல்வராகவன் செய்த செயல்! கண்ணீர் விட்டு கதறிய சாய் பல்லவி!

பிரேமம் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி.


அறிமுகமாகி குறிகிய காலத்திலேயே தனதின் சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த சாய் பல்லவி தற்போது பெரிய ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். அந்த வரிசையில் சூர்யா நடிப்பில் விரைவில் திரைக்கு வர காத்திருக்கும் NGK படத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார்.  இந்த படத்தின் ஷூட்டிங்கில் ஒரு காட்சியில் நடிக்கும் போது சாய் பல்லவியின்  நடிப்பில் திருப்தி அடையாத இயக்குனர் செல்வராகவன் பல  ரி டேக்குகளை எடுத்துள்ளார் .

எனினும் அவர் எதிர்பார்த்த நடிப்பு சாய் பல்லவியிடம்   இருந்து  வராததால் செல்வராகவன் அந்த காட்சியை நாளை படமாக்கலாம் என்று சொல்லி சென்றுவிட்டாராம். இதனால் சோகமடைந்த சாய் பல்லவி  வீட்டிற்கு சென்று அழுது நான் ஒரு சிறந்த நடிகை அல்ல என்று எண்ணி கஷ்டப்பட்டு மனமுடைந்து இருந்தாராம். 

எனினும் அடுத்த நாளின் முதல் டேக்கிலேயே இயக்குனர் செல்வராகவனை தனது நடிப்பின் மூலம் திருப்தி அடைய செய்துள்ளார் நடிகை சாய்பல்லவி. நடிகர் சூர்யா தான் தன்னை ஊக்கப்படுத்தி, நானும் பல ரி டேக்குகளை செல்வராகவன் அவர்களிடம் இருந்து வாங்கி இருப்பதாகவும் கூறி அவரை தேற்றி இருக்கிறார். இவ்வாறு NGK படத்தில் நடித்த அனுபவம் பற்றி மனம் திறந்தார் சாய் பல்லவி.