இணையதளங்களில் லீக்கான சாய் பல்லவி வீடியோ! படக்குழுவுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

பிரபல தென்னிந்தியா கதாநாயகி சாய் பல்லவி நடித்து வரும் படத்தின் புகைப்படங்கள் லீக்கான சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வளர்ந்து வரும் தென்னிந்திய கதாநாயகிகளில் சாய் பல்லவியும் ஒருவர். இவருடைய வீட்டுப்பெண் போன்ற முக வசீகரம் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வகையில் அமைந்துள்ளதால் ரசிகர்களை இவர் பெரிதும் கவர்ந்துள்ளார்.

இவர் தற்போது ஒரு தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார். ராணா டகுபாத்தி திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். திரைப்படத்தில் சாய்பல்லவி பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணாக நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கானது தற்போது வாராங்கல்லில் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இவர் ஒரு பேருந்து நிலையத்தில் படம்பிடித்து கொண்டிருந்தார். மிகவும் சோர்வாகவும், டென்ஷனாகவும் காணப்பட்டார். அங்கிருந்த பொதுமக்கள் யாராலும் இவரை கண்டுபிடிக்க இயலவில்லை. 

இந்தப் படத்தில் இவர் நக்சலைட் இயக்கத்தை சேர்ந்த பெண்ணாக நடிக்கிறார். நக்சலைட் இயக்கத்தில் சேர்ந்த உடன் இவருடைய காதல் வாழ்க்கை தலைகீழாக மாறுவது போன்று கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் முக்கிய வேடங்களில் பிரியாமணி, நந்திதா தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை வேனு உதுகுலா இயக்குவது குறிப்பிடத்தக்கது.

இந்த படமானது அடுத்த வருட தொடக்கத்தில் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.