ஓரினச் சேர்க்கைக்கு கூப்டுறாங்க..! தப்பு தப்பா தொடுறாங்க! ஸ்ரீசதானந்த மடம் இளம் மாணவர்களுக்கு பகீர் அனுபவம்!

மாணவர்களிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக சதானந்த மடம் நிர்வாகி மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு வைரலாகி வருகிறது.


நெடுங்குன்றம் ஊராட்சியில் சதானந்தபுரம் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு சதானந்த மடம் என்பது இயங்கி வருகிறது. இந்த மடத்தின் உரிமையாளரின் பெயர் மங்கையர்கரசி. இந்த மடத்தை ஆனந்தன் என்பவர் நிர்வகித்து வருகிறார். இந்த மடத்தில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தங்கியுள்ளனர்.

இவர்களில் 9 பேர் திடீரென்று ஆசிரமத்திலிருந்து மாயமாகினர். அவர்களில் இருவர் பேசும் வீடியோவானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது நிர்வாகி ஆனந்தன் மாணவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் வன்புணர்ச்சி ஈடுபடுவதாக அவர்கள் புகார் கூறினர். 

மேலும் அவருடைய ஆசைக்கு இணங்காவிட்டால் ஆசிரமத்தை விட்டு வெளியேறும் சூழல் ஏற்படும் என்று மாணவர்களை பயமுறுத்தி வைத்திருந்ததாக வீடியோவில் கூறியுள்ளனர். இந்த வீடியோவை சசிகுமார் என்ற வழக்கறிஞர் சென்னை காவல்துறை ஆணையரின் கண் பார்வைக்கு எடுத்துச்சென்று புகார் மனு அளித்தார்.

இதனிடையே மட நிர்வாகத்தினர் இந்த குற்றசாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளனர். மேலும் அவர்கள் சம்மந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோருடன் தாம்பரத்திலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.  சில மாதங்களுக்கு முன்னால் சசிகுமார் சதானந்த மடத்திற்கு வருகை தந்ததாகவும், அப்போது அவர் சில புறம்பான செயல்களை செய்ததால் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்றும் கூறப்பட்டிருந்தது. இதற்கு பழிவாங்கவே மடத்திலிருந்து 9 மாணவர்களை தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு உண்மைக்குப் புறம்பான வீடியோக்களை வெளியிட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர்.

உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்ததில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீட்டெடுக்கப்பட்டது செங்கல்பட்டில் உள்ள சிறார் பள்ளியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவமானது நெடுங்குன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.