ஐந்தரை வருடங்களுக்குப்பிறகு மீண்டும் களம் இறங்கிய சச்சின்! முதல் பந்திலேயே பவுண்டரி! தெரிக்கவிட்ட மாஸ்டர் பிளாஸ்டர்!

சுமார் ஐந்தரை ஆண்டுகளுக்கு பிறகு கிரிக்கெட் உலகின் மாஸ்டர் பிளாஸ்டர் என்று அழைக்கப்படும் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் மீண்டும் களமிறங்கி பேட்டிங் செய்த சம்பவம் வைரலாக பரவி வருகிறது.


ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ பேரழிவிற்கு நிவாரணம் திரட்டுவதற்காக அந்த நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பல்வேறு நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி இன்று ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இந்த கிரிக்கெட் போட்டியில் ஒரு அணிக்கு ரிக்கி பாண்டிங் மற்றும் எதிர் அணிக்கு அதன் கில்கிரிஸ்ட் ஆகியோர் தலைமை தாங்கினர்.

சச்சின் டெண்டுல்கர் ரிக்கி பாண்டிங் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டார். இந்த போட்டி நடக்கும் அதே மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டியும் நடைபெற இருந்தது. இதனால் ஆஸ்திரேலியா மகளிர் அணியின் வீராங்கனை எலிஸ் பெர்ரி நான் பந்துவீச சச்சின் டெண்டுல்கர் விளையாட வேண்டும். இதனால் நிவாரணம் அதிகமாக திறலும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஆஸ்திரேலிய அணியின் வீராங்கனையின் வேண்டுகோளை ஏற்ற சச்சின் டெண்டுல்கர் ஐந்து வருடத்திற்கு மேல் இன்று மைதானத்தில் களமிறங்கி கிரிக்கெட் விளையாடினார். எலிஸ் பெர்ரி வீசிய முதல் பந்திலேயே சச்சின் டெண்டுல்கர் பவுண்டரி விளாசி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். பல வருடங்களுக்குப் பிறகு சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.