குறுக்கு வழி! மகனுக்கு சச்சின் கூறிய அட்டகாச அறிவுரை!

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திரவீரர் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தனது அப்பா தனக்கு கூறிய அதே அறிவுரையை தனது மகன் அர்ஜுனுக்கும் கூறியுள்ளார். அதை வாழ்நாளில் என்றும் கடைபிடிக்க வேணும் என்றும் சச்சின் தனது மகனை அறிவுறுத்தியுள்ளார்.


சச்சின் டெண்டுல்கர் என்றாலே நமக்கு எல்லாம் நினைவிற்கு வருவது அவர் கிரிக்கெட் அரங்கில் செய்த சாதனைகளும், அவர் களத்தில் நேர்மையாக நடந்து கொள்வதுமே ஆகும். அவர்  அவுட் என்று தெரிந்தால் நடுவர் அவுட் கொடுக்கும் முன்னரே அவரே களத்தை விட்டு வெளியேறிவிடுவார்.  இதனால்  சச்சினை கண்டால் உலகத்தில் உள்ள அணைத்து அணி கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரு தனி மரியாதை தான் என்றே கூறலாம்.

சச்சினின் அப்பா அவருக்கு வாழ்க்கையில் குறுக்கு வழியை மட்டும் பயன்படுத்த கூடாது என்று சிறு வயதில் அறிவுரை கூறியிருந்தாராம். அதே அறிவுரையை தான் நான் என் மகனுக்கும் சொல்லிவருவதாகவும்,மேலும் எனது மகனை நான் கிரிக்கெட் அடியே ஆகவேண்டும் என வற்புறுத்தவில்லை. வாழ்க்கையில் எந்த தொழில் வேண்டுமாலும் செய்யலாம். ஆனால் அந்த தொழிலில் முன்னேற எந்த குறுக்கு வழியையும் பயன்படுத்த கூடாது எனவும் அவர் தன் மகனிடம் கூறியிருப்பதாகவும் சச்சின் கூறியுள்ளார்.