சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டேவிட் வார்னர் அதிரடி! ஜடேஜா சொதப்பல்! மோசமாக தோற்ற CSK!

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த சென்னை அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா அணியில் ஒரு சில மாற்றங்களை செய்திருந்தார். தொடர்ந்து விலையாடுவதால் தோனி இன்றைய போட்டியில் இருந்து ஓய்வு எடுத்து கொண்டுள்ளார்.
இந்த முடிவால் சாம் பில்லிங்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவரே தோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பராக செயல்பட்டார் . மேலும் மிச்சேல் சான்டநெருக்கு பதிலாக சுழற் பந்து வீச்சாளர் கரண் சர்மா அணியில் சேர்க்கப்பட்டிருந்தார் .
தொடக்க வீரர்களாக களமிறங்கிய வாட்சன் மற்றும் டு பிளெஸ்ஸிஸ் சிறப்பாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். சிறப்பாக ஆடிய வாட்சன் 31 ரன்களும், டு பிளெஸ்ஸிஸ் 45 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய எந்த வீரரும் சரியாக விளையாடாத காரணத்தினால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை எடுத்தது. மிடில் ஓவர்களை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக வீசினர். இதனால் சென்னை அணியால் ரன்களை குவிக்க முடியவில்லை.
சிறப்பாக பந்து வீசிய ரஷீத் கான் 4 ஓவர்களில் 17 ரன்களை மட்டும் விட்டு கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
பின்னர் களமிறங்கிய சன் ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். டேவிட் வார்னர் 25 பந்துகளில் 50 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். பரிஸ்டோவ் ஆட்டமிழக்காமல் 61 ரன்களை எடுத்தார் . இதனால் சன் ரைசர்ஸ் அணி 16.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எளிதாக எட்டியது. அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யபட்டார்.