அவளுக்கு 31..! எனக்கு 51..! பிரியமான நடிகையிடம் அந்த டைரக்டர் மயங்கிய கதை!

31 வயது நடிகை 51 வயது டைரக்டர் இடையிலான ஊடல், வதந்தி தான் தற்போது கோடம்பாக்கத்தையே பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது.


ஐடி கம்பெனியில் சாதாரண ஊழியராக கேரியரை தொடங்கிய அவருக்கு தெரியாது ஒரு காலத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளும் தன்னை அவர்கள் வீட்டு பெண்ணாக நினைக்கப்போகிறார்கள் என்று. செய்தி வாசிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த அவர் பிறகு சீரியல் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் நன்கு பரிட்சயம் ஆனார்.

திடீரென கிடைத்த பட வாய்ப்பு மூலமாக திரையுலகில் வெற்றிக் கொடி காட்டி நடிகையான அவர், பிறகு சரியான படங்களை தேர்வு செய்யாததால் பீல்ட் அவுட் ஆகும் நிலைக்கு சென்றார். மேலும் சினிமா உலகம் என்றாலே இருக்க கூடிய அட்ஜெஸ்ட்மென்ட் விஷயத்திலும் நாயகி எதிர்பார்த்த ஒத்துழைப்பு தரவில்லை.

இதனால் சினிமா உலகம் கண்டு கொள்ளாமல் இருந்த நிலையில் கை கொடுத்தவர் தான் நம்ம டைரக்டர் - நடிகர். வில்லனாகவும், கேரக்டர் ஆர்டிஸ்டாகவும் வலம் வந்து கொண்டிருந்த அவருக்கு கதாநாயகன் வாய்ப்பு கிடைக்க, நாயகியாக நடிக்க யாரும் முன்வரவில்லை. அதற்கு காரணம் நடிகரின் வயது.

ஆனால் அதைப் பற்றி பொருட்படுத்தாமல் நம்ம பிரியமான நாயகி டைரக்டருக்கு ஜோடியானார். படமும் ஹிட். மேலும் ஒன்று இரண்டு காட்சிகளிலும் ஜோடிப் பொருத்தம் சூப்பர் என்று சிலர் கொளுத்திப் போட, நிஜ வாழ்க்கையிலும் இருவரும் ஜோடியாகும் அளவிற்கு நெருங்கினர். நாயகி ஏற்கனவே இரண்டு பேரை காதலித்து தோல்வியில் முடிந்திருந்தது.

3வதாக காதலித்த நபரும் இந்த கதையை தெரிந்து கழன்று கொண்டதாக சொல்கிறார்கள். இதனால் நாயகியும் - டைரக்டரும் லிவிங் டுகெதராக இருப்பதாவும் விரைவில் திருமணம் என்றும் பேச்சு அடிபட்டது. ஒரு கட்டத்தில் இந்த பேச்சுகளால் அதிர்ந்த நாயகியின் குடும்பம் நாயகிக்கு கால் கட்டு போட வேறு மாப்பிள்ளையை பார்க்க ஆரம்பித்தனர்.

இந்த சமயத்தில் தான் நடிகையிடன் டைரக்டர் பிரபோஸ் செய்ததாக தகவல்கள் பரவின. பிறகு அந்த தகவலை டைரக்டரே மறுத்துள்ளார். இது எல்லாமே செட்டப். நடிகை - டைரக்டர் கதை ஊருக்கு தெரியட்டும் என்று செய்யப்பட்ட சதி என்கிறார்கள். இதனால் நாயகியின் குடும்பத்தார் தான் வேதனையில் தவிக்கிறார்களாம்.