பட்டினி போட்டு கொடுமை! காதல் மனைவி தற்கொலை! போலீஸ் எஸ்.ஐயை காப்பாற்ற முயற்சி!

சென்னை அருகே சேலையூர் காவல் நிலைய எஸ்.ஐ மனைவி தற்கொலை தொடர்பாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.


  கரூரை சேர்ந்த ஜெய் கணேஷ் சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் மதுரையை சேர்ந்த பிரவீணாவை கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். 17 வயது சிறுமியாக இருந்த பிரவீணாவை ஏமாற்றி அழைத்துச் சென்று ஜெய் கணேஷ் திருமணம் செய்து கொண்டதாக புகார் உள்ளது. திருமணத்தின் போது மார்க்கெட் ஏஜென்டாக இருந்த ஜெய்கணேசுக்கு பின்னர் காவல் உதவி ஆய்வாளர் பணி கிடைத்துள்ளது-

  காவல் உதவி ஆய்வாளர் பணி கிடைத்த பிறகு காதல் மனைவி பிரவீணா மீதான மோகம் ஜெய் கணேசுக்கு குறைந்தாகவும், தனக்கு 100 சவரன் நகை போட்டு திருமணம் செய்து கொள்ள பல பெண்கள் தயாராக இருப்பதாகவும் கூறி ஜெய் கணேஷ் மனைவி பிரவீனாவுடன் சண்டையிட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் மாம்பாக்கத்தில் உள்ள வீட்டிற்கு வருவதை ஜெய் கணேஷ் குறைத்துக் கொண்டுள்ளார்.

 இதனால் ஜெய் கணேசின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு பிரவீணா சண்டையிட்டதாகவும், மேலும் தம்பி மனைவியுடன் ஜெய் கணேசுக்கு தவறான உறவு இருப்பதாக கூறி பிரச்சனை செய்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் வீட்டிற்கு சம்பளப்பணத்தை கொடுப்பதையும், பொருட்கள் வாங்கித் தருவதையும் ஜெய் கணேஷ் நிறுத்தியதாக பிரவீணா உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரவீணா உடல் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.

 அவர் மரணத்தில் மர்மம் இருபபதாக உறவினர்கள் போராட்டம் நடத்தினர். ஆனால் விசாரணையில் பிரவீணா தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து ஜெய்கணேசை அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஜெய் கணேஷ் வீட்டிற்கு முறையாக சென்று வராததும், மாதச் செலவுக்கு பணம் கொடுக்காததும் பிரவீணானை மனதளவில் பாதிக்கச் செய்துள்ளது- இதனால் பட்டினியாக கிடந்த பிரவீணா ஒரு கட்டத்தில் தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

 இருந்தாலும் கூட ஜெய்கணேஷ் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்ய பிரவீணா உறவினர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால் போலீசார் தொடர்ந்து விசாரணை மட்டுமே மேற்கொண்டு வருகின்றனர். பிரவீணாவுக்கு தாய் தந்தை இல்லாத காரணத்தினால் இந்த வழக்கில் மேல் நடவடிக்கைக்கு வாய்ப்பில்லை என்று போலீஸ் தரப்பிலேயே கிசுகிசுக்கப்படுகிறது.