இனி ஏடிஎம் கார்டுகள் செல்லாது! SBI வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

வாடிக்கையாளர்களின் வங்கிப் பணம் மறைமுகமாக திருடு போவதை தடுக்க டெபிட் கார்டு முறையை முற்றிலுமாக ஒழிக்க பாரத ஸ்டேட் வங்கி முடிவு செய்துள்ளது. இந்த புதிய நடைமுறை மூலம் இனி ஏ.டி.எம். மையங்களில் டெபிட் கார்டு இல்லாமல் மூலம் பணம் எடுத்துக் கொள்ளலாம்.


அதாவது யோனோ என்ற செயலி மூலம் இனி வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைலில் இருந்து ஏ.டி.எம். இயந்திரத்திற்கு சில கட்டளைகள் கொடுத்து தேவையான பணம் பெற்றுக்கொள்ளலாம்.

டெல்லியில் நடைபெற்ற வங்கி அதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்ற பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் இது தொடர்பாக கூறுகையில் நாட்டில் 90 கோடி டெபிட் கார்டுகளும், 3 கோடி கிரடிட் கார்டுகளும் புழக்கத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் நாங்கள் அறிமுகப்படுத்த உள்ள யோனோ செயலி மூலம் டெபிட் கார்டுகளின் பயன்பாட்டை படிப்படையாக குறைத்து விட முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த யோனோ செயலி கிட்டதட்ட பேடிஎம் போன்பே உள்ளிட்ட செயலிகள் போலவே செயல்படும் என கூறலாம். இந்த டிஜிட்டல் பரிவர்த்தனையை படிப்படியாக அனைவரும் பழகிவிட்டால் ஏ.டி.எம். மையத்திற்கு சென்று இந்த யோனோ செயலி மூலம் ஒரு சில கட்டளைகளை அந்த இயத்திரத்திற்கு தெரிவித்து பணம் பெற்றுக் கொள்ளலாம்.

அதேபோல் வணிக நிறுவனங்களுக்கு சென்று தேவையான பொருட்களை யோனோ செயலி மூலம் வாங்கிக் கொள்ளலாம். இந்த புதிய நடைமுறையை அமலுக்கு கொண்டு வர நாடு முழுவதும் 68 ஆயிரம் யோனோ கேஷ் மையங்கள் அமைக்கப்பட்டு சோதனை அடிப்படையில் இருக்கிறது. மேலும் 10 லட்சம் யோனோ கேஷ் மையங்கள் அமைக்க எஸ்.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.

இதனால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்னவென்றால் இனி எந்த நபரும் வங்கி மேலாளர் போல் நமக்கு போன் செய்து “உங்கள் டெபிட் கார்ட்டு வேலிடிட்டி முடியப் போகிறது கார்டு நம்பர் சொல்லுங்கள்” என நமது தகவலை திரட்டி பணம் திருட முடியாது.

அதே சமயம் ஏ.டி.எம். மையங்களில் வந்து நமக்கு பணம் எடுத்து தருவது போல் உதவி நமது கார்டில் இருந்து நமக்குத் தெரியாமலேயே பணம் எடுக்க முடியாது. ஏ.டி.எம். இயந்திரங்களில் ஸ்கிம்மர் எனப்படும் கருவி பொருத்தி நமது கார்டு விவரங்களை திருடி புதிய கார்டு தயாரித்து பணத்தை சுருட்ட முடியாது.

நாம்  எங்கு செல்வதற்கும் செல்போன் இருந்தால் போதும். டெபிட் கார்டை மறந்துவிட்டோம் என கவலைப்பட வேண்டிய அவசியம் இனி இருக்காது.