ஒரே நாளில் 16 விக்கெட்! தென் ஆப்பிரிக்க அணியை திணற வைத்த இந்திய பவுலர்கள்!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தென்ஆப்பிரிக்க அணி தனது இரண்டாம் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்துள்ளது .


முன்னதாக இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல்அவுட் ஆனது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதனால் ஃபாலோ ஆன் ஆன தென்னாப்பிரிக்க அணியை தனது இரண்டாவது இன்னிங்சை மீண்டும் தொடங்கியது. தென்ஆப்பிரிக்கா அணி தனது இரண்டாவது இன்னிங்சிலும் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. ஆனால் தென்ஆப்பிரிக்கா அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர இறுதியில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை மட்டுமே எடுத்தது.

தென்ஆப்பிரிக்கா அணி இந்திய அணியை விட 209 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது .இதனால் தென் ஆப்பிரிக்க அணி இந்த டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை சந்திப்பது கிட்டத்தட்ட உறுதி என்பது குறிப்பிடத்தக்கது .