கமல் அரசியலில் விஸ்வரூபம் எடுப்பார்! நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் ஆவேச பேச்சு!

உலக நாயகன் கமல்ஹாசன் அரசியலில் கண்டிப்பாக விஸ்வரூபம் எடுப்பார் என இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் கூறியுள்ளார்.


நடிகர் கமல்ஹாசன் திரைத்துறைக்கு வந்து 60 ஆண்டுகள் முடிந்ததையொட்டி அதை கொண்டாடும் விதமாக நேரு உள்விளையாட்டு அரங்கில் உங்கள் நான் எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, இசைப்புயல் ஏ ஆர் ரகுமான், இசை ஞானி இளையராஜா, எஸ் ஏ சந்திரசேகர் போன்ற பல்வேறு தமிழ் திரையுலக ஜாம்பவான்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விஜயின் தந்தை இயக்குனர் சந்திரசேகர் அவர்கள், கமலின் அரசியல் பிரவேசம் குறித்து பேசினார். 

அப்போது பேசிய அவர் சினிமா துறையில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்ற பேச்சு சமீபகாலமாக அதிகமாக நிலவி வருகிறது. மற்ற துறையிலிருந்து அரசியலுக்கு வரலாம். ஆனால் சினிமா துறையில் இருந்து ஏன் வரக்கூடாது? என கேள்வி எழுப்பிய எஸ் ஏ சந்திரசேகர், நடிகர் கமல்ஹாசன் கண்டிப்பாக அரசியலில் விஸ்வரூபம் எடுப்பார் எனவும் கூறினார்.

மேலும் கமல் மற்றும் ரஜினி என்ற இரண்டு ஜாம்பவான்கள் இணைந்தால் தமிழ் நாட்டுக்கு மிகப்பெரிய நல்லது எனவும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.