ஆண் கொரோனா நோயாளிகள் வார்டில் வெறும் உள் ஆடையுடன் பணியாற்றும் நர்ஸ்கள்..! எந்த ஹாஸ்பிடல் தெரியுமா?

ஆண்கள் சிகிச்சை பெற்று வந்த கொரோனா வார்டில் பெண் செவிலியர் ஒருவர் பாதுகாப்பு உடைக்குள் உள்ளாடை மட்டும் அணிந்திருந்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


ரஷ்யா நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தாக்குதல் வேகமெடுத்து வருவதை தொடர்ந்து, அங்கு (PPE) என்றழைக்கப்படும் "பாதுகாப்பு உபகரணங்கள், உடைகள்" பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ரஷ்ய நாட்டின் தலைநகர் மாஸ்கோ. மாஸ்கோவில் இருந்து சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் "துலா" என்ற புறநகர் பகுதி அமைந்துள்ளது. 

இங்கு அமைந்துள்ள ஒரு மருத்துவமனை ஆண்கள் வார்டில் பெண் செவிலியர் ஒருவர் PPE உடைக்குள் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்திருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தது புகைப்படமானது  அந்நாட்டில் தலைப்பு செய்தியாக மாறியுள்ளது. 

இதுபற்றி தெரிந்தவுடன் உள்ளூர் மருத்துவ அதிகாரிகள் சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பந்தப்பட்ட செவிலியர் பாதுகாப்பு வழிமுறைகளை மீறியதற்காக கடுமையாக கண்டிக்க பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. 

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த பெண்ணுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் அந்த பெண் மனம் புண்படும்படி கருத்துக்களையும் தெரியாத காரணத்தினால் அவர்மீது எத்தகைய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த புகைப்படமானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.