ரஷ்ய அழகிக்கு சென்னை இளைஞனால் பார்க் ஓட்டலில் நேர்ந்த விபரீதம்?

ரஷ்ய நாட்டை சேர்ந்த பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த நபர் கைது. இச்சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.


ஜானே கடாரியா என்றவர் ரஷ்யா நாட்டைச் சேர்ந்தவர். இவருக்கு வயது 30. இவர் ராணி மெய்யம்மை டவர், M.R.C. நகர், சென்னை-28 என்ற விலாசத்தில் வசித்து வந்தார். 

இவர் ஒரு Modeling மற்றும் சினிமா துறையில் நடிப்பு கற்றுக்கொடுத்து வருகிறார். சென்னையில் பார்க் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருக்கிறார். புகைப்படம் மற்றும் நடிப்பு புகைப்படம் எடுத்து பொழுதுப்போக்கி கொண்டிருந்தார்.

26 வயது நிரம்பிய R.M. ரூபேஷ் குமார் என்பவர்  பார்க் ஹோட்டலில் வைத்து எடுத்த புகைப்படங்களை வைத்து தன்னை மிரட்டி வலுக்காட்டாயமாக  தொந்தரவுகள் கொடுத்து வந்ததாக புகாரளித்தார். ஆபாசமான செய்திகளை அனுப்பி, தன்னை மனரீதியாக துன்புறுத்தினார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் 14-3-2019 அன்று புகார் அளித்தார்.

இன்று (22-4-2019) காலை ரூபேஷ் குமாரை கைது செய்து விசாரணை விசாரணை செய்து நீதிமன்ற காவலுக்கு போலீசார் அனுப்பினர்.