மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு ரூ.150 நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். அகமதாபாத்தில் காந்தியின் நினைவாக ரூ.150 நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்
ரூ.150 நாணயம்! புழக்கத்திற்கு வந்தது! வெளியிட்டார் மோடி!

மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு ரூபாய் 150 நாணயம் வெளியிடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். அதன்படி அந்த நாணயத்தை இன்று டெல்லியில் மோடி அறிமுகம் செய்தார்.
நாளை முதல் வங்கிகளில் 150 ரூபாய் நாணயம் புழக்கத்திற்கு வரும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. விருப்பம் இருப்பவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ரூபாய் 10 நாணயம் தான் அதிகபட்ச மதிப்பு கொண்ட நாணயமாக இருந்தது. இந்த நிலையில் மகாத்மாவின் 150வது ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டத்தின் நினைவாக ரூ.150 நாணயம் வெளியாகியுள்ளது.