இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை! தலைமை பொறுப்புக்கு வந்த முதல் பெண்மணி!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக ரூபா குருநாத் பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்.


செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் படி தலைவர் பதவிக்கு ரூபா குருநாத் போட்டியிட்டார். அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனை அடுத்து அவர் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகியுள்ளார்.

இதன் மூலம் 100 ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்திய கிரிக்கெட்டின் நிர்வாகத்திற்கு வந்துள்ள முதல் பெண்மணி என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார். 

ரூபா குருநாத் பதவி ஏற்ற போது எடுத்துள்ள சில புகைப்படங்கள் கீழே..