ஓடும் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவமானது சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிவேகமாக சென்ற ஸ்கார்பியோ கார்..! திடீரென பற்றி எரிந்த தீ..! உள்ளே இருந்த 2 பேர்? சேலம் பரபரப்பு!

சேலம் மாவட்டத்தில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு "ஸ்கார்பியோ" ரக காரை சொந்தமாக வைத்திருந்தார். இவரிடம் ராஜா என்பவர் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இருவரும் டால்மியா காலனியிலிருந்து காரில் 5 ரோடு பகுதிக்கு சென்றுக்கொண்டிருந்தனர்.
அரபிக் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராவிதமாக கார் என்ஜின் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இருவரும் பயந்துபோய் காரை விட்டு இறங்கி ஓடிவிட்டனர். சில நிமிடங்களிலேயே கார் முழுவதுமாக தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனடியாக அவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
துரதிருஷ்டவசமாக தீயணைப்பு படையினர் வருவதற்குள், கார் முழுவதுமாக எரிந்து நாசமானது. விபத்து குறித்து அப்பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவமானது சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.