நீ தான் தெய்வம்! போலீஸ்காரர் காலில் விழுந்த ஆளுங்கட்சி எம்எல்ஏ! நெகிழ வைத்த காரணம்!

சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலக அளவில் பல்வேறு நாடுகளில் பரவ ஆரம்பித்து கோரத் தாண்டவம் ஆடி வருகிறது.


கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவுவதை தடுப்பதற்காக மக்கள் வெளியில் நடமாடுவதை தடுக்கும் வகையில் இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் இந்த காலகட்டத்தில் மருத்துவர்களுக்கு அடுத்தபடியாக காவல்துறையினரே இரவு பகல் பாராமல் பொது மக்களுக்காக உழைத்து அவர்களை பாதுகாத்து வருகின்றனர்.

அத்தகைய காவல்துறையினருக்கு நன்றி கூறும் விதமாக ஆந்திராவில் நடந்த சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆந்திராவில் ஆளும் கட்சியான ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ செட்டி பால்குனா போலீசாருக்கு நன்றி சொல்லும் விதமாக அந்த பகுதியில் உள்ள போலீஸ் ஒருவரின் காலில் விழுந்த வீடியோவானது மனதை நெகிழும் வகையில் உள்ளது.

ஆந்திரா ஆளுங்கட்சியை சேர்ந்த எம்எல்ஏ போலீசாரின் காலில் விழுந்து நன்றி தெரிவிக்கும் போது சுற்றி இருந்த மக்கள் எம்எல்ஏவின் இந்த செயலை பாராட்டி அவருக்கு கைதட்டி வரவேற்பு கொடுக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.